சாதித்தது ‘சைவம்’.. பெருமிதத்தில் ஏ.எல்.விஜய்..!

 

ஏ.எல்.விஜய் தனது கனவுப்படம் என ‘சைவம்’ படத்தை ஆரம்பித்தபோதே எதுக்குப்பா இவர் இப்படி ரூட் மாறி போறார் என பலர் முணுமுணுத்தார்கள். படம் வெற்றி பெற்றதோ இல்லையோ, ஆனால் அவர் எடுத்தது சரியான முடிவு என்பதற்கு அங்கீகரிக்கும் வகையில் தான் தற்போது அந்தப்படத்திற்கு கிடைத்திருக்கும் இரண்டு தேசிய விருதுகளும் சொல்லாமல் சொல்கின்றன.

ஆம்.. சைவம் படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய அழகு… அழகு… பாடலுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, சிறந்த பாடகிக்கான விருதை அழகு… அழகு… பாடலை பாடிய உத்ரா உன்னிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ‘தங்கமீன்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்தயாழை மீட்டுகிறாய்’ பாடலுக்காக, நா.முத்துக்குமார் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.