சைவம்’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்..!

தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் விஜய். இந்தமுறை தயாரிப்பும் அவரே தான். மிகப்பெரிய நடிகர், நடிகைகள் யாரும் இன்றி ‘தெய்வத்திருமகள்’ சாராவையும் தனது கதையையும் மட்டுமே நம்பி, களம் இறங்கியுள்ளார் விஜய்.

இந்தப்படத்திற்கு தனது உணர்வுப்பூர்வமான இசையால் மெருகூட்டியுள்ளார் ஜீ.வி.பிரகாஷ். சில தினங்களுக்கு முன்புதான் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் நெகிழ்ந்துபோனதுடன் படத்திற்கு ‘U’ சான்றிதழும் வழங்கியுள்ளனர்.