‘சாகசம்’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’கை வெளியிடுகிறார் சிம்பு..!

தன்னை மீண்டும் தமிழ்சினிமாவில் நிலைநிறுத்தும் முயற்சியாக கடந்த இரண்டு வருடங்களாக பிரசாந்த் நடித்துவரும் படம் ‘சாகசம்’. அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ள இந்தப்படம் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த, ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக் தான். இதில் கதாநாயகியாக அமெண்டா நடித்துள்ளார்.

இந்தி கவர்ச்சி நடிகை நர்கீஸ் பக்ரி ஒரு பாட்டுக்கு பிரசாந்துடன் இணைந்து செம ஆட்டம் போட்டிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தில் ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், சிம்பு ஆகியோர் ஒவ்வொரு பாடலை பாடியுள்ளார்கள்.

இந்தப்படத்தில் பாடிய சிம்புவே, இன்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சாகசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுகிறார். ஆடியோ ரிலீஸை இம்மாதமே நடத்த தீர்மானித்துள்ள பிரசாந்தின் தந்தை தியாகராஜன், படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.