ஏப்-27ல் ‘சதுரங்க வேட்டை’ இசைவெளியீடு..!

இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களால் ஒரு காமெடி நடிகராகவே அறியப்படுவர் மனோபாலா. ஆனால் ரஜினி, விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து எண்பது, தொண்ணூறுகளில் சூப்பர்ஹிட் படங்களை தந்த இயக்குனர் அவர். தற்போது இடைவிடாமல் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும அந்த வேலைகளுக்கு இடையே ஒரு படத்தையும் தயாரித்து முடித்துவிட்டார்.

‘சதுரங்க வேட்டை’ என்கிற அந்தப்படத்தை ஹெச்.வினோத் என்பவர் இயக்கியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத ஷான் ரால்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசைவெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி(ஞாயிறு) அன்று சத்யம் திரையரங்கில் நடைபெற இருக்கிறது.