‘சதுரங்க வேட்டை-2’வுக்கு பூஜை போட்டார் மனோபாலா..!

sathuranga-vettai-2-movie-pooja-still

கடந்த வருடம் மனோபாலா தயாரிப்பில் எச்.வினோத் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ படம் சூப்பர் ஹிட்டானது நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் கூறியிருந்தார்கள்.

தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பூஜை போட்டு அதனை உருதிப்படுத்தியுளார் மனோபாலா. இதில் ஹீரோவாக அரவிந்த் சாமியும் கதாநாயகியாக த்ரிஷாவும் நடிக்கவுள்ளார்கள். முக்கிய வேடங்களில் ராதாரவி, பிரகாஷ்ராஜ், நாசர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் மட்டுமே எழுதுகிறார். சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தமுறை கிராமத்திற்கு பதிலாக நகரம் கதைக்களமாக மாறியுள்ளது.

தினம் தினம் மெருகேறிவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதனை மிக தெளிவாகவும் விவரமாகவும் ‘சதுரங்க வேட்டை-2’ படத்தில் காட்டவுள்ளார்கள்.