புயல் பாதிப்பு காரணமாக ‘S3’ ரிலீஸ் தேதியில் மாற்றம்..!

s-3-1

சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக உருவாகி வந்தது ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘S3’.. பிரதமரின் பொருளாதார அதிரடி நடவடிக்கையால், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது காரணமாக ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு டிச-23ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

கிறிஸ்துமஸ் ரிலீஸாக அனைவரும் இந்தப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நேரத்தில் தான், இப்போது வேறு தேதி குறிப்பிடப்படாமல் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. இதற்கு சமீபத்தில் சென்னையை உலுக்கிய ‘வர்தா’ புயலின் தாக்கம் தான் காரணம் என்றே தெரிகிறது.. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள சூர்யாவும், “‘S3’ பட ரிலீஸ் தள்ளிப்போகிறது.. இயற்கை சார்ந்த நம்மை மீறிய சில காரணிகள் உள்ளன. மிகப்பெரிய வெற்றிக்காகத்தான் இந்த நிகழ்வு என நினைப்போம்” என கூறியுள்ளார்.