ஜனவரி-3௦ல் ‘இசை’யை ரிலீஸ் பண்ணுகிறார் எஸ்.ஜே.சூர்யா..!

 

இந்தா ரிலீஸ், அந்தா ரிலீஸ் என தள்ளிக்கொண்டே வந்த ‘இசை’ படத்தை வரும் ஜன-3௦ல் வெளியிட தீர்மானித்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. இன்னொரு பக்கம் ஜன-29ஆம் தேதி வெளியாகவிருந்த அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப்போனது வேறு எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.

இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிபெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது ‘இசை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். படமும் இரண்டு  இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட கதை தான். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் இருவரும் இசையமைப்பாளர்களாக நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் சாவித்ரி நடித்துள்ளார்.