தனுஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான மாரி-2 படத்தில் ரௌடி பேபி என்கிற பாடல் இடம்பெற்று ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. துள்ளலான இசை, கலக்கலான பாடல் வரிகள், அதற்கு தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் அற்புதமான நடனம் என எல்லாமாகச் சேர்ந்து அந்த பாடலை படத்தின் ஹைலைட்டான ஒன்றாகவும் மாற்றியது.
இந்தநிலையில் அந்த பாடல் வெளியான நாளிலிருந்து தற்போது வரை சுமார் 200 மில்லியன் அதாவது 20 கோடி பேர் இந்த பாடலை பார்த்துள்ளார்கள் தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன் தனுஷின் கொலவெறி பாடல் தான் அதிக அளவில் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்ட பாடலாக இருந்தது.
இப்போது அவரது சாதனையை அவர் நடித்துள்ள ரவுடி பேபி பாடல் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு வெற்றிக்கு காரணமாக இருந்த நடன இயக்குனர் பிரபுதேவா மற்றும் ஜானி மாஸ்டர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர் பாலாஜி மோகன் என அனைவருக்குமே தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார் தனுஷ்