ஜூன்-12ல் ரோமியோ ஜூலியட் ரிலீஸ்..!

ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட்’ படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் இமான் இசையில் தயாரான ‘டண்டணக்கா’ பாடல் மட்டும் பிரச்சனையில் சிக்கியது. இந்தப்பாடலை நீக்கவேண்டும் என் போர்க்கொடி தூக்கிய டி.ராஜேந்தர் இப்போது சமாதானமாகிவிட்டாராம்.

அவர் சொன்னபடி சில காட்சிகளை மட்டும் நீக்குவதற்கு இயக்குனர் லட்சுமண் ஒகே சொல்லிவிட்டதால் இருதரப்புக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தப்படத்தை வரும் ஜூன்-12ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.