ரோமியோ ஜூலியட் ரிலீஸுக்கு டி.ஆர் கிரீன் சிக்னல்..!

ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட்’ படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் ‘டண்டணக்கா’ பாடலுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு டி.ராஜேந்தர் போட்டுள்ள வழக்கால் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் படத்தை ரிலீஸ் பண்ணும் விஷயத்தில் டி.ஆர் இறங்கி வந்துல்லாதாக தெரிகிறது..

தங்களது படத்தையும் ‘டண்டணக்கா’ பாடலையும் டி.ஆர் பார்த்தால் சாமாதனமாகி விடுவார் என நினைத்த படத்தின் இயக்குனர் லட்சுமண் டி.ஆரை அழைத்து முழு படத்தையும் போட்டுக்காட்டினாராம். படத்தை பார்த்த டி.ஆர் ஓரளவுக்கு திருப்தியாகி ரிலீஸ் பண்ணுவதற்கு சம்மதித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் வழக்கை வாபஸ் வாங்கப்போவதும் இல்லையாம்.. அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது..