‘ரோமியோ ஜூலியட்’ வெற்றியால் நிமிர்ந்த ஜெயம்ரவி..!

 

ஒரு வெற்றிப்படம் கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தை விட, நீண்டநாட்கள் தனது படம் வெளியாகாமல் இருக்கும் இடைவெளியை சரிசெய்யவேண்டும் என்கிற நிலையில் இருந்த ஜெயம் ரவி மிகவும் நம்பியது சமீபத்தில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தைத்தான். அவர் நம்பிக்கை வீணாகவில்லை. படம் நன்றாக ஒஆடுவதுடன் ஜெயம் ரவிக்கான பாராட்டுக்களையும் வாங்கித்தந்துள்ளது.

இந்தப்படத்தை ரிலீஸ் செய்த காஸ்மோ வில்லேஜ் சிவகுமாருக்கு இது இரண்டாவது வெற்றி. ஏற்கனவே ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை வாங்கி வெளியிட்டு நல்ல லாபம் பார்த்தவருக்கு, ரோமியோ ஜூலியட்டும் திருப்தியான வசூலையே தந்து வருகிறது.

ரோமியோ ஜூலியட் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பத்திரிக்கையாளர்களிடம் படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார், நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் லக்‌ஷ்மண் ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.