மாயத்திரை ‘ராசாத்தியே’ பாடலை வெளியிட்ட ரோஜா

பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் தற்போது, ‘மாயத்திரை’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். இந்த படத்தின் ‘ராசத்தியே’ என தொடங்கும் இரண்டாவது பாடலை நடிகை ரோஜா வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார். இப்பாடலுக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

“மாயத்திரை ஒரு பேய் படமாக உருவானாலும், வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமாக பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம். இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்” என்கிறார்கள் படக்குழுவினர்…