ரோபோ சங்கருக்கு தனுஷின் சர்ப்ரைஸ் கிப்ட்..!

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி’ படத்தில் ரோபோ சங்கரின் டைமிங் காமெடி அனைவரையும் கவர்ந்துள்ளது. படம் முழுதும் தனுஷ் கூடவே வரும் கேரக்டர்.. அதிலும் ஒரு காட்சியில் சிகரெட்டை பற்றவைத்து, ஸ்டைலாக புகையை ஊதி, அப்புறம் பணிவாக தனுஷிடம் கொடுப்பது போன்ற காட்சிகள் எல்லாம் தனுஷின் பெருந்தன்மையால் கிடைத்தவை தான்.

படம் ரிலீசான பின் ஊடக விமர்சனங்களிலும் வலைதளங்களிலும் ரோபோ சங்கரின் காமெடிக்கு பாராட்டு கிடைத்து வருகிறது. படத்தின் வசூலும் நன்றாகவே இருக்கிறது. அதனால் சந்தோஷப்பட்ட தனுஷ், ரோபோ சங்கருக்கு தங்கச்சங்கிலி ஒன்றை பரிசளித்துள்ளாராம். ஏற்கனவே ‘காக்கா முட்டை’ படத்திற்கு தேசிய விருது கிடைத்த சமயத்தில் கூட தனுஷ் அதில் பணியாற்றிய அனைவருக்கும் தங்கச்சங்கிலி பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.