ஆர்.கே.நகரில் வைபவ் – களமிறக்கிய வெங்கட்பிரபு சிஷ்யர்..!

vaibhav (1)RKn

சென்னை-28 இரண்டாம் பாகம் ஹிட்டடித்தை தொடர்ந்து அடந்த டீமில் ஒருவரான வைபவ் மீண்டும் சோலோ ஹீரோவாக தனது பணியை ஆரம்பித்துவிட்டார்.. படத்தின் பெயர் ஆர்.கே.நகர். இரண்டு வருடங்களுக்கு முன் ஜெய் ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘வடகறி’ படத்தை இயக்கிய சரவணராஜன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

சென்னை-28’ இரண்டாம் பாகத்தில் ஜெய்யின் ஜோடியாக நடித்த சனா அல்தாப் தான் இந்தப்படத்தில் வைபவிற்கு ஜோடியாக நடிக்கிறாராம். பிரேம்ஜி அமரன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.. இந்தப்படத்தை வெங்கட் பிரபுவே தயாரிக்கிறார் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். ரொமான்ஸ் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் துவங்குகிறது.