ஆர்.கே – ஷாஜி கைலாஷ் ஹாட்ரிக் கூட்டணியில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’…!

‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ படங்களை தொடர்ந்து நடிகர் ஆர்.கேவும், மலையாள முன்னணி இயக்குனர் ஷாஜி கைலாஷும் மூன்றாவது முறையாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் இணைந்திருக்கின்றனர். இதிலும் ஆர்கே போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.

கதாநாயகியாக நீது சந்திரா நடிக்கிறார். இனியா, சுஜா வாருணி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. இதற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பிரமாண்ட ரயில்வே ஸ்டேஷன் செட் போடப்பட்டுள்ளது.

தமன் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ‘போக்கிரி’ பிரபாகர் வசனம் எழுதுகிறார். குறுகிய கால தயாரிப்பாக, மூன்றே மாதங்களில் படத்தை முடித்து ரிலீஸ் பண்ண இருப்பதாக ஆர்.கே கூறியுள்ளார். அவர் ஏற்கனவே நடித்த ‘என் வழி தனி வழி’ படம் அடுத்தமாதம் திரைக்கு வர இருக்கிறது.