வைகை எக்ஸ்பிரஸில் ஆர்கே – ஆர்.கே செல்வமணி மோதல்..!

முன்னணி நடிகர்களின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகலையே ஐந்து நாட்களில் எடுத்து விடுகின்ற இந்த காலத்தில், தனது கேரக்டருக்காக் எந்த சவாலையும் ஏற்றுக்கொள்ளும் ஆர்கே, தான் நடித்துவரும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்காக 13 நாட்களாக சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்.

ஷாஜி கைலாஷ் ஆர்.கே கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் இந்தப்படத்தில் ஆர்.கேவுடன் மோதும் வில்லன் சாட்சாத் நம் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தான். கனல் கண்ணனின் மேற்பார்வையில் படமாக்கப்பட்ட இந்த சண்டைக்காட்சிக்காக ஆர்.கே பண்ணிய ஹோம் வொர்க்கை கேட்டால் வாயை பிளந்து விடுவீர்கள்..

அமெரிக்கா போய் சண்டைப் பயிற்சியின் நுணுக்கங்களை​ கற்று வந்துள்ளார். ​நியூயார்க் அருகில் க்ரீன்பாயிண்ட்,ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்ட​ண்ட் புரொபஷனல்  மையத்துக்கு சென்​று 15நாட்கள் பயிற்சி எடுத்தார். பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சி​யும் பெற்றார் ஆர்.கே.. ​சேசிங் காட்சிக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்​து பயன்படுத்தியுள்ளார் ஆர்.கே.