அப்போ வடிவேலு.. இப்போ விவேக்.. ரஜினி ரூட்டில் பயணிக்கும் ஆர்.கே..?

ஆர்.கே என்றதும் ஞாபகம் வருவது ஷாஜி கைலாஷ் டைரக்‌ஷனில் அவர் நடித்த ‘எல்லாம் அவன் செயல்’ படம் தான். இப்போது மீண்டும் ஷாஜியின் டைரக்‌ஷனில் ‘என் வழி தனி வழி’ என்கிற படத்தில் நடிக்கிறார். இப்போ ரஜினி ரூட்டில் போகிறார் ஆர்.கேன்னு சொல்றீங்களே அதுக்கு என்ன காரணம்னு நீங்க கேட்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சுருக்கம் ஆர்.கே. அவரின் வெகு பிரபலமான வசனம் ‘என் வழி தனி வழி’. அடுத்ததாக தான் ஹீரோவாக நடித்த முதல் இரண்டு படங்களில் வடிவேலுவை புக் பண்ணிய ஆர்.கே இப்போது இந்தப்படத்தில் விவேக்கை ஒப்பந்தம் செய்துள்ளார். இதுவும் ரஜினி பாணிதான். லாஜிக் ஓகேவா..?

இதற்கு முன் வக்கீல் கதாபாத்திரமேற்ற ஆர்.கே இதில் விரைப்பான போலீஸ் அதிகாரியின் பாத்திரம் ஏற்றிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வந்து என்னசெய்யப்போகிறார் என்பதை புதுமையாக, சட்ட ஆதாரத்தோடு படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ் .

படத்தில் மிகப்பெரும் நடிகப் பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் ஆர்.கே, ராதாரவி, விசு, ஆசிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், இளவரசு, சம்பத், சீதா, ரோஜா மற்றும் காமடிக்கு விவேக், பரோட்டா சூரி, ஹீரோயின்களாக பூனம் கவுர், தெனாலி ராமன் புகழ் மீனாட்சி தீட்சித் நடித்துள்ளனர்.

இதுவும் போதாதென்று அட்லீனா கேத்ரீனா என்ற ரஷ்யன் மாடல் அந்தரத்திலே தொங்கிக்கொண்டு கயிற்றில் ஆடுவதில் உலக அளவில் புகழ் பெற்றவர். அவரையும் வைத்து ஒரு பாடல் படம் பிடிக்கப்பட்டுள்ளது.