ரித்விகாவை ஸ்தம்பிக்க வைத்த ரஜினி..!

ரஞ்சித்தின் தீர்மானமோ, அல்லது ரித்விகா செய்த புண்ணியமோ நடிக்க வந்து, தனது நாலாவது படத்திலேயே கபாலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா. மெட்ராஸ் படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டருக்கும் இந்தப்படத்தில் நடிப்பதற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத கேரக்டராம் ரித்விகாவிற்கு.

கடந்த சில தினங்களாக ரஜினியுடன் ரித்விகா இணைந்து நடிக்கும் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினியுடன் நடிக்கும் காட்சிகளில் நடிக்கும்போது அவ்வளவு பெரிய மனிதர் முன்னாள் நிற்கிறோமே என தயக்கமும் பயமும் இருந்ததாம். ஆனால் ரஜினியின் யதார்த்தமான பேச்சு அவரை சகஜமாக்கி நடிக வைத்ததாம்.

குறிப்பாக ஒரு காட்சி முடிந்ததும் ரித்விகா அருகில் வந்த ரஜினி நன்றாக நடித்தாய் என பாராட்டியபோது ஆச்சர்யத்தில் அப்படியே ஸ்தம்பித்துவிட்டாராம். அந்த நாள் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்கிறார் ரித்விகா.