காட்டேரி’ படப்பிடிப்பு துவங்கியது..!

katteri shooting

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி’. இதில் வைபவ் கதாநாயகனாக நடிக்க நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சனம் பஜ்வா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் சனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத். இவர் ‘யாமிருக்க பயமே’ என்ற படத்தில் இயக்குநர் டீகேவுடன் இணைந்து பணியாற்றியவர். காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.