சேரனின் ‘ரிப்பீட்டு’ பார்முலா.. இது என்ன கலாட்டா..?

காளைமாடு பசு ஆகாது.. கறந்தபால் மடி சேராது என தமிழில் ஒரு பழமொழியே உண்டு… அந்தவகையில் இங்கே தியேட்டர்களில் வெளியான படங்கள், அதன்பின் சில நாட்களில் டிவிடிக்களாக மாறுவது தான் வாடிக்கை.. ஆனால் முதன்முறையாக சேரன் இந்த சிஸ்டத்தை மாற்றி தான் ஏற்கனவே டிவிடியாக வெளியிட்ட ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தியேட்டர்களில் திரையிடுகிறார்..

தியேட்டர்களில் திரையிடாமல் தனது சி2எச் மூலமாக டிவிடி சிஸ்டத்தை கொண்டுவந்து புரட்சியை ஆரம்பித்து வைத்த இவரே இப்போது ரிப்பீட்டு பார்முலாவை பயன்படுத்துகிறார் என்பதுதான் ஆச்சர்யம்.. அதுசரி ஏன் மீண்டும் தியேட்டர்களில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறார்..?

“மக்களில் பலர் இந்தப்படத்தை இன்னும் பார்க்கவில்லை என்கிறார்கள்.. தியேட்டர்களுக்கு செல்பவர்கள் தியேட்டரில் தான் படத்தை பார்க்க விரும்புகிறார்கள்.. அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவே தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறோம்” என கூறியுள்ளார் சேரன். இந்தப்படத்தில் சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.