‘ரெமோ’வுக்காக சிவகார்த்திகேயன் அடித்த கேரள விசிட்..!

remo-in-kochi-visit
சிவகார்த்திகேயன் முதன்முறையாக பெண் வேடத்தில் அதுவும் நர்ஸாக நடித்துள்ள ‘ரெமோ’ படம் நாளை மறுநாள் ரிலீஸாக இருக்கிறது.. கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக சுற்றிவருகிறார் சைவகார்த்திகேயன். தம்ழில் மட்டுமல்லாது தனது நகைச்சுவை மற்றும் ஸ்டைலான நடிப்பால் மலையாள ரசிகர்களை கூட சிவகார்த்திகேயன் கவர்ந்துவிட்டார்.. அதனால் கேரளாவிலும் ரிலீஸாகும் ‘ரெமோ’ படத்தை புரமோட் பண்ணுவதற்காக எர்ணாகுளம் சென்று வந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அங்கே ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கென ரசிகர் மன்றங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. ‘ரெமோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற எர்ணாகுளம் பிரஸ் கிளப்பிற்கே ரசிகர்கள் அவரை சந்திக்க வந்துவிட்டனர்.. அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்து, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்ட சிவகார்த்திகேயன், அங்குள்ள மீடியாக்களிடம் பேசும்போது, மலையாள நடிகர்கள் அனைவரையும் பிடிக்கும் என்றும் குறிப்பாக மோகன்லாலிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.