சிங்கப்பூரில் ரெமோவின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்..!

remo 1

மிகவும் ஸ்டைலிஷான படமாக சிவாகர்த்திகேயன் நடிக்கும் ரெமோ உருவாகியுள்ளது.. பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ரஜினி முருகன் வெற்றியை தொடர்ந்து ராசியான ஜோடியாக மாறிய சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். பிசி,ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தின் சிங்கிள் ட்ராக் ஒன்றை வரும் ஜூலை-1ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சைமா விருது வழங்கும் விழாவில் வைத்து வெளியிட இருக்கிறார்களாம். ‘செஞ்சிட்டாளே’ என தொடங்கும் இந்தப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதுதான் ஹைலைட்.