‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன்-ரசூல் பூக்குட்டியின் புதிய முயற்சி..!

remo dubbing

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பாண்டிராஜின் உதவியாளரான பாக்யராஜ் கண்ணன் என்ற புதியவர் இயக்கும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.. இந்தப்படத்தின் ஹைலைட்டே சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடித்துள்ளார் என்பதுதான்..

அப்படியானால் பெண் வேடத்தில் வாரும் சிவகார்த்திகேயனுக்கு டப்பிங் யார் பேசுவார்கள்..? சந்தேகமே வேண்டாம் சிவகார்த்திகேயனே தான் பெண் குரலில் டப்பிங் பேசியுள்ளாராம். ஏற்கனவே அவர் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் வேறு சொல்லவா வேண்டும்…? அதேசமயம் படத்தில் சவுன்ட் என்ஜினீயராக பணியாற்றும் ரசூல் பூக்குட்டி தது திறமையால் சிவகார்த்தியன் பெண் குரலில் பேசிய டப்பிங்கை இன்னும் மெருகேற்றி ஒரிஜினல் பெண்குரலாகவே மாற்றிவிட்டாராம்.