அசத்தலாக வெளியான ‘ஜாக்சன் துரை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிபிராஜ் நடித்துவரும் படம் ‘ஜாக்சன் துரை’. தரணீதரன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சிபிராஜுடன் சத்யராஜ் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். கூடவே காமெடி கூட்டணிக்கு கருணாகரனும் நான் கடவுள் ராஜேந்திரனும் கைகோர்த்திருக்கிறார்கள். தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நம் கண்களை விரிய வைத்துள்ளது.

போஸ்டரில் இவர்கள் நால்வரின் தோற்றமும், அதிலும் குறிப்பாக சத்யராஜ், மொட்ட ராஜேந்திரன் இருவரின் தனித்தனி லுக்கும் நம்மை மிரட்டுகிறது. அடுத்த வெற்றிக்கு அச்சாரம் போடும் விதமாக ஏதோ பிளானோடு சிபிராஜ் இறங்கி வேலைபார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.