கதையை பதிவு செய்யுங்கள் – விக்ரமன் வேண்டுகோள்..!

 

ஏதோ ‘கத்தி’ படத்திற்கு மட்டும் தான் கதைத்திருட்டு குற்றச்சாட்டு எழுந்திருப்பதுபோல நினைக்கவேண்டாம்… கடந்த இருபது வருடங்களில் இது பலமுறை நிகழ்ந்துள்ளது. இந்த ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்பதால் பகிரங்க வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

இதனால் “இயக்குனர்கள் மட்டுமல்லாது கதாசிரியர்கள் கூட தங்களது கதையை கட்டாயம் பதிவு செய்யுங்கள். ஆதுதான் கதை திருட்டை தடுக்க உதவும்” என அறிவுறுத்தியிருக்கிறார் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன். முறைப்படி கதையை பதிவு செய்ய விரும்பவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்திருக்கிறாராம் விக்ரமன்.