மிஸ்டர் லோக்கல் டப்பிங்கை முடித்தார் ராதிகா

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அவரது அடுத்த படமாக ‘மிஸ்டர் லோக்கல்’ உருவாகி வருகிறது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை கலக்கலான காமெடி படங்களுக்கு பெயர் போன ராஜேஷ்.எம் இயக்குகிறார். இந்தப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் டப்பிங் பணிகள் நேக் ஸ்டூடியோ (Knack Studio) ஸ்டுடியோவில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்தப்படத்தில் தனது டப்பிங் வேலைகளை முடித்துக்கொடுத்து படக்குழுவினருடன் விடைபெற்றார் ராதிகா. இந்தப்படம் வரும் மே-1ஆம் தேதி மே தின வெளியீடாக ரிலீசாகிறது.

இயக்குனரும் ஹீரோவும் காமெடிக்கு பெயர் போனவர்கள் என்பதால் இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது என உறுதியாக கூறலாம்.