மீண்டும் விஷாலுடன் இணைந்து நடிக்கும் ராஷி கன்னா..!

Rashi khanna - vishal

புதுடெல்லியைச் சேர்ந்த ராஷி கன்னா, ‘மெட்ராஸ் கஃபே’ இந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் பல தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அதர்வா ஜோடியாக ‘இமைக்கா நொடிகள்’, சித்தார்த் ஜோடியாக ‘சைத்தான் கி பச்சா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ராஷி கண்ணா. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான வெங்கட் மோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதற்குமுன் மலையாளத்தில் வெளியான வில்லன்’ படத்தில் விஷாலுடன் ராஷி கன்னா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலுடன் நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘கத்தி’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.