சிம்ரனுக்கு இணையாக ‘ரங்கூன்’ நாயகியை பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்..!

Rangoon-67

ஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன்’.. கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு என நம்பர் ஒன காமெடி ஷோக்களை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சீடராக பணியாற்றியவரும் கூட..

இந்தப்படத்தில் கதாநாயகியாக சனா மக்பல் என்பவர் நடித்துள்ளார்.. நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் தான் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் சிம்ரனின் படங்களில் பணிபுரிந்தபோது அவரது திறமையை பார்த்து வியந்த மாதிரி, சைனாவை பார்த்தபோதும் அதே உணர்வு தான் ஏற்பட்டது என புகழாரம் சூட்டினார்.

இந்தப்படத்திற்கு ஆர்.ஹெச் விக்ரம் என்பவர் பாடல்களுக்கு இசையமைக்க, இரண்டு பாடல்களுடன், பின்னணி இசையும் அமைத்துள்ளார் விஷால் சந்திரசேகர். வடசென்னை டூ ரங்கூன் என்கிற கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த ‘ரங்கூன்’ வரும் ஜூன் 9ஆம் தேதி ரிலீசாகிறது.