பாக்யராஜ் ஐடியாவை பயன்படுத்தி ரம்யா நம்பீசனை விரட்டும் மூவர்..!

natpunna-ennannu-theriyuma-1

பாக்யராஜின் நடித்து, இயக்கிய ‘இன்றுபோய் நாளைவா’ படத்தின் பாணியில் சந்தானம்-பவர்ஸ்டார் காம்பினேசனில் உருவான படம் தான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’.. பக்கத்து வீட்டுக்கு குடிவரும் இளம்பெண்ணை காதலிப்பதில் நண்பர்கள் மூவருக்கும் ஏற்படும் போட்டிதான் மையக்கதை.. இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றதாலோ என்னவோ, தற்போது இதேபாணியில் இன்னொரு படம் உருவாகியுள்ளது.

படத்தின் பெயர் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’. இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவக்குமார் இயக்குகிறார். இவர் இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். முன்று நண்பர்கள் ஒரு பெண்னை காதலிக்க விரும்புகிறார்கள், இவர்கள் மூவரில் ஒருவரான கதாநாயகன் எவ்வாறு மற்ற நண்பர்களையும் தாண்டி கதாநாயகியாய் தன் மீது காதல்வயப்பட வைக்கிறான் என்பதுதான் கதை.

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த கவீன் முதன்முறையாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்க, இப்படத்தின் நகைச்சுவைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் மொட்டை ராஜேந்திரன், இளவரசு,அழகம் பெருமாள், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க இவர்களுடன் அருண்ராஜா காமராஜ், ராஜு, வெங்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.