‘கூத்தனு’க்காக குரல் கொடுத்த ரம்யா நம்பீசன்..!

remya nambeesan singing

‘பாண்டிய நாடு’ படத்தில் லட்சுமி மேனனின் அசத்தலான ஆட்டத்துடன் இடம்பெற்ற ‘பை பை பை கலாச்சி பை’ என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடியவர் நடிகை ரம்யா நம்சபீன். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது ‘கூத்தன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் அதேபோன்ற கலக்கலான பாடலை பாடியுள்ளார் ரம்யா.

நடன கலைஞர்கள் மற்றும் துணைநடிகர்கள் வாழ்க்கை பின்னணியில் எடுக்கப்படுகின்ற இந்தப்படத்தில் புதுமுகம் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்க இவருக்கு வில்லனாக பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் நடிக்கிறார். ஸ்ரீஜீதா, கிரா மற்றும் சோனா ஆகிய புதுமுக நாயகிகள் நடிக்கின்றனர், இதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஏ.எல்.வெங்கி.

பல கன்னட படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் பாலாஜி இசையமைப்பில் விவேகா எழுதிய “ஓடு ஓடு காதல் காட்டு மிராண்டி” என்ற பாடலை ரசிகர்கள் கேட்டதுமே துள்ளும் விதமாக பாடியுள்ளார் ரம்யா நம்பீசன்.

“பல மொழிகளில் நான் பாடி இருந்தாலும் இந்தப் பாடல் வரிகளில் அமைந்துள்ள ஒருசில வார்த்தை உச்சரிப்பை அறிந்துகொள்ள ஆரம்பத்தில் சற்றே சிரமப்பட்டேன்.. ஆனாலும் பாடலாசிரியர் விவேகா பாடல் ஒலிப்பதிவின்போது உடனிருந்ததால் அவரது உதவியுடன் நன்கு பாட முடிந்தது” என்கிற ரம்யா நம்பீசனுக்கு கடந்த. சில தினங்களாக தொண்டைக்கட்டு இருந்தபோதும் சிறப்பாக பாடியுள்ளாராம்.