பேய்களை வாடகைக்கு விடும் சிங்கம்புலி..!

singam puli

தொண்ணூறுகளில் இளம் கதாநாயகனாக வளம் வந்தவர் ராம்கி. சமீபகாலமாக சில படங்கில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துவரும் ராம்கி, மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘இங்கிலிஷ் படம்’.. படத்தின் டைட்டில் தாங்க இது..

இத்திரைப்படத்தில் மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்திற்கு இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகருமாம். இதில் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார்.

கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில் ஒரு வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு விற்பதற்கு முயற்சி செய்கிறார் அந்த வீட்டில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்பட, அந்த வீட்டை வாங்க வரும் நபர் வீட்டில் பேய் இல்லை என்று நிருபித்தால் வீட்டை வாங்கி கொள்வதாக சொல்கிறார். எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய ராம்கி களத்தில் இறங்குகிறார். ஆனால் அதில் அவர் மிக பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டுவிட, யாரும் எதிர்பாராத விதமாக ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது, அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளையாக முற்றிலும் காமெடி கலந்த ஹாரர் திரில்லராக உருவாக்கியுள்ளார்களாம்.

இந்தப்படத்தில் சிங்கம் புலி பேய்களை வாடகைக்கு விடுபவராக வருகிறார் அவர் வரும் காட்சிகள் முழுவதும் பயங்கற அலப்பறையாக இருக்கும் என்றும் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது என்றும் கூறியுள்ளார் இயக்குனர் குமரேஷ் குமார்.