ராம்சரண் உதவிக்காக சண்டைக்கு வந்தார் சிரஞ்சீவி..!

ராம்சரணின் அடுத்த அதிரடியாக தெலுங்கில் ‘புருஸ்லீ தி பைட்டர்’ என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப்படமே தமிழில் “புருஸ்லீ – 2 தி பைட்டர் “ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது. ராம்சரண் கதாநாயகியாக ரகுல் பிரீத்தி சிங் நடிக்கிறார். மற்றும் ஹைலைட்டான விஷயமாக இந்த படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார்.

மகேஷ்பாபுவை வைத்து ‘தூக்குடு’ படத்தை கொடுத்தாரே அந்த சீனு வைட்லா தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். சினிமாவில் பைட்டராக இருக்கும் ராம்சரண் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகள் குடும்பத்தில் நடக்கும் செண்டிமெண்ட் போன்றவைதான் இந்தப்படத்தின் திரைக்கதை. மகதீரா படத்திற்கு பிறகு இந்தப்படத்தின் கிளைமாக்ஸில் ஒரு அதிரடி சண்டை காட்சியில் சிரஞ்சீவி நடித்திருக்கிறார் என்பது இன்னும் ஒரு ஹைலைட்டான விஷயம். அக்-16ல் இந்தப்படம் வெளியாகிறது.