ரிலீஸில் முந்துகிறது ‘காலா’..!

Kaala-Release-Date-Poster-2

எப்போதாவது சில நேரங்களில் இப்படி அரிதாக நடந்துவிடுவது உண்டு.. ஷங்கர் டைரக்சனில் ரஜினி நடித்துள்ள ‘2.O’ படம் ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. கடந்த ஜனவரியில் ரிலீஸ் என சொல்லப்பட்டு, பின் ஏப்ரலில் ரிலீஸ் என மாற்றப்பட்டு, தற்போது இன்னும் பணிகள் நிறைவடையாததால் மீண்டும் தள்ளிபோயுள்ளது..

அதேசமயம் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித்தின் டைரக்சனில் குறுகியகால தயாரிப்பாக விரைவாக ‘காலா’ படம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. வரும் மார்ச் இறுதிக்குள் படம் தயாராகிவிடும் என்பது உறுதியான ஒன்று.

இதனால் ‘2.O’ ரிலீஸ் விஷயத்தில் ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக தனது ‘காலா’வை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டார் ரஜினி. இதை தொடர்ந்து வரும் ஏப்-27ஆம் தேதி ‘காலா’ ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.