ரஜினி பிறந்தநாளில் சிவகார்த்திகேயனுக்கு பரிசு..!

 

சிவகார்த்திகேயன் இயல்பிலேயே ரஜினி ரசிகர்… விஜய் டிவியில் ஆரம்ப காலத்தில் இருந்து அவரது காமெடி நிகழ்ச்சிகளை கவனித்து வந்தவர்களுக்கு இது நன்றாகவெ தெரியும். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாமல், அட்சரம் பிசகாமல் ரஜினி குரலில் மிமிக்ரி பண்ணுவது சிவகார்த்திகேயனின் ரெகுலர் ஐட்டங்களில் ஒன்று.. அதற்கேற்ற மாதிரி இப்போது ரஜினி முருகன் என்கிற படத்தில் ரஜினி ரசிகராக வேறு நடிக்கிறார்.

அப்படிப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு, தற்போது அவர் நடித்துள்ள படத்திற்கு  கமல் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘காக்கி சட்டை’ படத்தின் தலைப்பு கிடைத்து ஒரு அதிர்ஷ்டம் என்றால், அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரஜினி பிறந்தநாளிளான டிச-12ல் நடைபெற இருப்பது இன்னொரு அதிர்ஷ்டம்.. சொல்லப்போனால் ரஜினி பிறந்தநாளில் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்க இருக்கும் பரிசு என்றுகூட சொல்லலாம்.

தயாரிப்பாளராக தனுஷ், இயக்குனர் துரை செந்தில்குமார், சிவகார்த்திகேயன், அனிருத் என ‘எதிர்நீச்சல்’ படத்தின் டீம் தான் அப்படியே இந்த ‘காக்கி சட்டை’யிலும் இணைந்திருக்கிறது. கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கும்கி படத்தின் ஒளிப்பதிவாளரான சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தின் வசனத்தை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார். படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார்.