ரஜினி முருகனுக்கு ‘U’ சான்றிதழ்..! செப்-17ல் ரிலீஸ்..!

ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயன் தனது கேரியரில் மிக முக்கியமான படமாக நினைக்கும் ‘ரஜினி முருகன்’ விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக வரும் செப்-17ஆம் தேதி ரிலீஸாகிறது.. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம் தலைமையில் சிவகார்த்திகேயனும் சூரியும் மீண்டும் இதில் கூட்டணி சேர்ந்ததோடு, இந்தமுறை ராஜ்கிரணையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டுள்ளார்கள்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷின் பெர்பார்மன்ஸ் ட்ரெய்லரிலேயே பட்டையை கிளப்புகிறது. இமானின் இசையில் ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா’ ஏற்கனவே அத்திரி புத்திரி ஹிட்டாகிவிட்டது. இந்நிலையில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஈராஸ் நிறுவனமும், வேந்தர் மூவிஸும் இணைந்து வெளியிடுகின்றன.