திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு

petta 1

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். விஜய்செதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா உட்பட முன்னி நட்சத்திரங்கள் பலரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை சண் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வாரணாசி, குலுமனாலி, டார்ஜிலிங், சென்னை என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது.. இந்த தகவலை ரஜினியே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதுடன் திட்டமிட்டதற்கு 15 நாட்கள் முன்பாகவே ‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவுபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்படத்தில் ரஜினி டான், காலேஜ் புரபெஷர் என இரண்டுவிதமான கெட்டப்பில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மாதம் கோட் சூட் அணிந்த ரஜினியின் நடுத்தரவயது கெட்டப் போஸ்டர் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டரில் யூத் லுக்கில் கலக்கலாக இருக்கிறார். ஆக, ரசிகர்களுக்கு நிச்சயம் கமர்ஷியல் விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.