“சபரிமலைக்கு ஐதீகத்தை பின்பற்றி பெண்கள் செல்லலாம்” – ரஜினி கருத்து

rajini press meet

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம். வழங்கிய தீர்ப்புக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் தற்போது தான் நடித்துவந்த, ‘பேட்ட’ படப்பிடிப்பு முடிந்து வாரணாசியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினியிடம் சென்னை விமான நிலையத்தில் சபரிமலை விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினி, “எல்லா பெண்களுக்கும் எல்லாவற்றிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதேசமயம் கோயில் என்று சொல்லும்போது, ஒவ்வொன்றுக்கும் ஒரு சடங்கு இருக்கும். காலம் காலமாக வரக்கூடிய ஐதீகம் இருக்கும். அதில் யாரும் தலையிடக்கூடாது.. மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சடங்குகள் ஆகியவற்றில் கொஞ்சம் நிதானம் காட்ட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து” என கூறியுள்ளார் ரஜினி..