‘ஒரு புதிய ஸ்டார் பிறந்திருக்கிறார்” ; ரெமோவை அலேக்காக தூக்கிய ரஜினி..!

siva-rajini
ஒரு படம் நன்றாக இருந்தால் அந்தப்படஹ்தையும் அதில் நடித்தவர்களையும் நேரிலோ அல்லது போனிலோ அல்லது கடிதம் மூலமாகவோ வாழ்த்துவது சூப்பர்ஸ்டார் ரஜினியின் இயல்பு. அந்தவகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்துச்செய்தி அவரை மட்டுமல்ல, படக்குழுவினருக்கும் சேர்த்து உற்சாக டானிக் ஊற்றி இருக்கிறது. குறிப்பாக ‘பெண் வேடத்தில் சிவா நடித்திருப்பது ரஜினியை ஏகத்துக்கும் கவர்ந்துவிட்டது என்றே தெரிகிறது.

‘ரெமோ’வை பார்த்துவிட்டு ‘ஒரு புதிய ஸ்டார் பிறந்திருக்கிறார்.. வாழ்த்துக்கள்’ என சூப்பர்ஸ்டாரே தன்னை போனில் அழைத்து வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பொதுவாக இத்தனை நாட்கள் ஒரு படத்தை பார்த்து பிடித்துப்போனால் நன்றாக இருக்கிறது என பாராட்டும் சூப்பர்ஸ்டார், சிவகார்த்திகேயனை இவ்வாறு பாராட்டியிருப்பது விஷேசம் தான்.