மகள் திருமண வரவேற்பில் ரஜினி கொடுத்த வித்தியாசமான பரிசு..!

rajini welcome gift

சூப்பர்ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா- விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் திருமண ஏற்பாடுகள் தொடங்கின.

விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன். இவரும் விவாகரத்து பெற்றவர். மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார். 10,11-ந் தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் நடக்கிறது. திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அரசியல் பிரபலங்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழத்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதைப்பந்து கொண்ட பைகளை வழங்கி ரஜினி அசத்தியுள்ளார்.

அந்த விதைப்பந்தில் உள்ளது எந்த மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது. பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பதுதான் வழக்கம். இன்னும் சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.