ரஜினியை தொடர்ந்து கலைஞர் உடல்நலம் விசாரித்த விஜய்-அஜித்

satrs met stalin

கடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று டார்ஜிலிங்கில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய சூப்பர்ஸ்டார் ரஜினி கலைஞரை நேரில் பார்த்துவிட வேண்டும் என காவேரி மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலின், அழகிரி,கனிமொழியை சந்தித்து கலைஞர் உடல் நிலை குறித்து விசாரித்தார்.

இன்று பிற்பகலில் விஜய்யும் அவரை தொடர்ந்து மாலையில் அஜித்தும் நேரடியாக மருத்துவமனைக்கே வந்து ஸ்டாலினை சந்தித்து கலைஞரின் உடல்நலம் குறித்தது கேட்டறிந்தனர்.