ரசிகர்மன்றத்தில் சேருவதற்கு புதிய செயலியை அறிமுகப்படுத்திய ரஜினி..!

rajini app
போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என கடந்த மீ மாதம் கூறிய ரஜினி, இப்போது போருக்கு தயாராகுங்கள் என தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அதற்கான படை வீரர்களை திரட்ட, அதாவது தனது ரசிகர்களை ஒன்றிணைக்கவும் முழு வீச்சில் பணிகளை துவங்கிவிட்டார்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரஜினி தமது பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ரசிகர்மன்றங்களின் உறுப்பினர்களும், தமிழ்நாட்டில் நல்ல ஒரு அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய இரண்டையும் www.rajinimadram.org என்ற வலைதள பக்கத்தில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் RAJINI MANDRAM என்கிற பெயரில் உள்ள ஆண்ட்ராய்டு இணையத்தள செயலியில் இவ்வாறு பதிவு செய்தும் உறுப்பினராகலாம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, ரஜினி ரசிகர்களுக்காக டிவிட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவோம் என்றும் ரஜினிகாந்த் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.