“இது ரஜினி ஸ்டைல்” ; இந்த ‘பஞ்ச்’சை முதலில் பேசியது யார் தெரியுமா..?

rajini-style

இன்று தனது 67வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். திரையுலகில் கிட்டத்தட்ட 42 வருடங்களை தாண்டிய அவரது பயணம் ஒன்றும் பூப்பாதை இல்லை. ரொம்பவே கரடு முரடானது. இப்போது அவர் வந்து அமர்ந்து இருக்கும் இடம் என்பது இனி இன்னொருவருக்கு கிடைக்கவே கிடைக்காது என்பதுதான் இத்தனை வருட ரஜினியின் மொத்த சம்பாத்தியம்.

சூப்பர்ஸ்டாரை பற்றி சொல்வதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.. ஆனால் அதை பட்டியலிட ஒருநாள் போதாது. இருந்தாலும் ஒரு சிறப்பு விஷயத்தை இங்கே பதிவு செய்கிறோம்.. ரஜினி சூப்பர்ஸ்டாரான பின்னர் இளைஞர்கள் தாங்கள் வித்தியாசமாக எந்த ஒரு ஸ்டைல் செய்தாலும் ‘இது ரஜினி ஸ்டைல்’ என்று சொல்லிக்கொள்வது வழக்கம்.

அதெல்லாம் 1980களுக்கு பிறகுதான். ஆனால் ரஜினி வளர்ந்துவந்த நேரத்தில் 1977ல் வெளியான ‘ஆடுபுலி ஆட்டம்’ படத்திலேயே ‘இது ரஜினி ஸ்டைல்’ என்ற வார்த்தையை கமலிடம் அடிக்கடி சொல்லுவார் அந்தப்படத்தில் நடித்த இன்னொரு ஹீரோ. அவர் வேறு யாருமல்ல சாட்சாத் ரஜினியே தான். தனது ஸ்டைல் பின்னாளில் ட்ரெண்டாக மாறும் என்பதை முன்கூட்டியே அவரால் கணிக்க முடிந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்.

இன்று பிறந்தநாள் காணும் சூப்பர்ஸ்டாருக்கு நமது behind frames சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.