‘தெய்வீக காதல்’ புத்தக வெளியீட்டு விழாவில் ‘பாபா’ உருவான கதை சொன்ன ரஜினி..!

rajini in book release

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ‘தெய்வீக காதல்’ என்கிற புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பரமஹம்ச யோகானந்தரின் “தெய்வீக காதல்” ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டார். மேலும் ஆன்மிகம் குறித்து சுமார் இருபது நிமிடத்திற்கு மேல் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது பாபா படத்தின் கதை தனக்குள் ஒரே நாளில் முழு ஸ்கிர்ப்ட் ஆக உருவான விதத்தையும் பகிர்ந்துகொண்டார். கூடவே தான் அவ்வப்போது ராகவேந்திரர், ரமணர், பாபாஜி, சச்சிதானந்தர் என ஆன்மிக குருக்களை மாற்றி மாற்றி பயணிப்பதற்கான காரணத்தையும் கூறினார்.

மொத்தத்தில் தான் ஒரு நடிகன் என்பதைவிட தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்வதிலே தான் பெருமை என்கிறார் ரஜினி. அதுமட்டுமல்ல, இதுநாள் வரை தான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் ஏதேச்சையாக அவ்வப்போது சில புத்தகங்களை வெளியிட்டிருந்தாலும் கூட ஒரு புத்தகத்தை படித்துவிட்டு, அந்த விழாவில் புத்தகத்தை வெளியிடுவதற்காகவே கலந்து கொள்வது இதுதான் முதன்முறை என்றும் ரஜினி குறிப்பிட்டார்.