வட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஆரம்பித்து அசத்திய ரசிகர்கள்..!

rajini peravai

தமிழ்நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்களிலும் இன்னும் பிற வெளிநாடுகளிலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது தெரிந்தது தான். தற்போது முதன் முதலாக வட அமெரிக்காவில் ரஜினிகாந்த் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டல்லாஸ் நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகரும், இந்த அமைப்பின் அமைப்பாளருமான இர தினகர் கூறுகையில், “வட அமெரிக்காவில் வசிக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின் அரசியலுக்கும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் லட்சியம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு இன மக்களின் உதவியுடன் பல்வேறு திட்டங்களையும், நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்கிறார்.

அது போல் ரஜினி தமிழக முதல்வர் ஆனதும் அமெரிக்காவிலிருந்து திட்டங்களையும் தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்ல ரஜினிக்கு உறுதுணையாக இருக்கவும் இந்த பேரவை செயல்படும்” என கூறுகிறார். .

அமெரிக்காவில் வசித்தாலும், ராமருக்கு அணில் போல், ரஜினியின் ஆட்சியில், அவருக்கு உறுதுணையாக செயல்படப் போவதாகவும் வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த பேரவையினர் கூறியுள்ளார்கள்.