‘ரஜினி முருகன்’ இப்போது ஸ்டுடியோகிரீன் கையில்..!

 

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் தான் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயன் இயல்பிலேயே ரஜினி ரசிகர்… அதற்கேற்ற மாதிரி இப்போது இந்தப்படத்தில் ரஜினி ரசிகராக வேறு நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மூலம் சூப்பர்ஹிட்டான பாடல்களை கொடுத்த D இமான் இசையமைக்கிறார். தற்போது இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் கூட்டணி வெற்றி வரலாறு நமக்கு தெரிந்தது தானே.. இன்ன தேதி என அறிவிக்கப்படாவிட்டாலும் சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’ செண்டிமெண்ட்படி, ‘ரஜினி முருகன்’ படம் மே-1ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.