ரஜினி முருகனின் மூன்றுகட்ட ரிலீஸ் பிளான்..!

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் தான் ‘ரஜினி முருகன்’ இமான் இசையமைக்கும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கான மூன்றுகட்ட திட்டங்களை வடிவமைத்துள்ளார்கள். இதன்படி ஏப்ரல் 25ல் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும், ஜூன் 7ஆம் தேதி இசைவெளியீட்டு விழாவையும், ஜூலை 17ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதியையும் பிக்ஸ் பண்ணியுள்ளார்களாம்..