ரகுவரன் இசை ஆல்பத்தை வெளியிட்ட ரஜினி..!

raguvaran album
மறைந்த நடிகர் ரகுவரனின் நடிப்பு பற்றி நாம் சொலி தெரியவேண்டியது எதுவுமில்லை. ஆனால் வெளி உலகிற்கு தெரியாமல் அவர் மறைத்து வைத்திருந்த இன்னொரு விஷயம் அவருக்குள் இருந்த இசைத்திறமை தான்.. ஆம்.. லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் இசைப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்தான் நடிகர் ரகுவரன்.

அதுமட்டுமல்ல, தானே சொந்தமாக 3௦க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து பாடியுள்ளார். இந்தப்படல்களை எல்லாம் தற்போது ‘ரகுவரன் ; எ மியூசிகல் ஜர்னி’ என்கிற பெயரில் அவரது மனைவி ரோகிணியும் மகன் ரிஷிவரனும் ஆல்பமாக தொகுத்துள்ளார்கள்.

இந்த ஆல்பத்தை வெளியிட முடிவுசெய்த இருவரும் இதை ரஜினி கையால் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என எண்ணினார்கள். இந்த தகவல் ரஜினியின் காதுகளுக்கு செல்ல, மகிழ்ச்சியுடன் முன்வந்து இந்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

ரகுவரனுக்கு தனது நட்பு வட்டாரத்தில் முக்கிய இடமளித்த ரஜினியை விட இதை வெளியிட சரியான நபர் வேறு யார் இருக்க முடியும்..?