கே.எஸ்.ரவிகுமாரை கூல் பண்ணிய ரஜினி..!

rajini in ksr daughter marriage

கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கமல், ஷங்கர், மணிரத்னம் உட்பட திரையுலக வி.ஐ.பிகள் பலரும் ஆஜராகினர். ஆனால் இந்த திருமணத்தில் கே.எஸ்.ரவிகுமாரை தனது ஆஸ்தான இயக்குனராக வரித்துக்கொண்ட சூப்பர்ஸ்டார் மட்டும் மிஸ்ஸிங் ஆனது பலரின் பேச்சு பொருளானது..

ஆனால் அந்த சமயம் ரஜினி தவிர்க்க முடியாத சில காரணங்களால் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள முடியவில்லை.. ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த இரண்டு தினங்களில் மணமக்களை தனியாக ஏற்பாடு செய்யப்பட ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து வாழ்த்தியதோடு, அவர்களுடன் நிறைய நேரம் செலவிட்டு மனமக்களோடு, சேர்த்து கே.எஸ்.ரவிக்குமாரையும் சந்தோஷப்படுத்தினார் ரஜினி..