ரஜினி முருகனுக்கு ரஜினியின் கிரீன் சிக்னல்..!

 

இப்போதுதான் டைட்டிலை வைத்துவிட்டு, ஒருசில எதிர்ப்புகளால் அதை தக்க வைக்க பலர் திண்டாடிக்கொண்டு இருக்கிறார்களே… அந்த வகையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க லிங்குசாமி தயாரித்துள்ள படத்திற்கு ‘ரஜினி முருகன்’ என ஒரு ஆர்வத்தில் பெயரை வைத்துவிட்டார்கள்..

ஆனால் இதற்கு ரஜினி என்ன சொல்லுவாரோ என பயந்து, அவரிடம் பேசி சம்மதம் வாங்குவதற்காக அவரை லிங்குசாமி சந்திக்க முயர்சித்தாராம். இதையறிந் ரஜினி, லிங்குசாமியை போனிலேயே அழைத்து, இதற்காக நேரில் எல்லாம் வர தேவையில்லை.. தாராளமாக என் பெயரை உபயோகப்படுத்துங்கள் என்று கிரீன் சிக்னல் கொடுத்தாராம்..

நேற்று நடைபெற்ற ‘ரஜினி முருகன்’ ஆடியோ ரிலீசின் போது இந்த தகவலை கூறி நெகிழ்ந்தார் லிங்குசாமி.. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சிவகார்த்திகேயனின் தாத்தாவாக நடித்துள்ளார் ராஜ்கிரண். இதுவரை ரசிகர்கள் சீரியஸாக பார்த்துவந்த ராஜ்கிரண் இதில் காமெடியில் கலக்கியுள்ளாராம்.