ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் ஜி.வி.பிரகாஷ்..!

gv - rajini 1
ஜி.வி.பிரகாஷுக்கு எப்படி தோதான கதைகள் தானாக தேடி வருகிறதோ, அதேபோல கேட்சிங் ஆன டைட்டில்களும் சுலபமாக அமைந்துவிடுகின்றன.. அந்தவகையில் ஏற்கனவே ‘டார்லிங்’ மூலம் வெற்றியை ருசித்த சாம் ஆண்டன் – ஜி.வி.பிரகாஷ் இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படத்திற்கு ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள்..

இது சூப்பர்ஸ்டார் ரஜினியின் எவர்கிரீன் ‘பாட்ஷா’வில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனம் இல்லையா..? அப்போ ரஜியினிடம் ஒரு வார்த்தை சொல்வதுதானே மரியாதையாக இருக்கும்…? ஜி.வி.பிரகாஷும் அதைத்தான் செய்திருக்கிறார்.. ரஜினி தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ‘2.O’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இல்லையா..? இயக்குனர் சாம் ஆன்டனையும் அழைத்துக்கொண்டு நேராக அந்த படப்பிடிப்பு தளத்துக்கே சென்றுவிட்டார் ஜி.வி..

ரஜினியை சந்தித்து இந்த டைட்டில் விபரத்தை சொல்லி அவரிடம் ஆசிகள் பெற்றும் விட்டார். ரஜினிக்கும் ரொம்பவே சந்தோசம்.. ‘டார்லிங்’ படத்தில் ஜி.வியின் காமெடி காட்சிகளை பாராட்டிய ரஜினி, ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தில் அவரது நடனம் இம்ப்ரூவ் ஆகியிருப்பதையும் குறிப்பிட்டு பாராட்டினாராம்.. அந்த சந்தோஷத்துடன் அப்படியே இயக்குனர் ஷங்கரையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று திரும்பியிருக்கிறார்கள்..